பிப்ரவரி14- 98, கோவை, காதலும் வெடிகுண்டும்…

எனது காதல் கவிதைத் தொகுப்பான ‘கவிதை அல்ல காதல் ‘ நூல் வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ல் 98ம் வருடம் கோவையில் நடந்தது.
அண்ணன் அறிவுமதியும், அண்ணன் பழநி பாரதியும் சிறப்பு விருந்தினர்கள்.மாலை 3 மணிக்கு விழா.
இடம் ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் திவ்வோதயா அரங்கம்.
‘விழா நேரத்திற்கு முன்பே கூட்டம் வரத் துவங்கி விட்டது. விரைவாகவே அரங்கம் நிறைந்து விட்டது.
அண்ணன் பழநிபாரதி சாய்பாபா காலனியின் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
கூட்டம் அதிகமாகி விட்டதால் [...]