இழந்த பிறகே
தெரிகிறது
இருந்தவற்றின் மகத்துவம்.

இழந்த பிறகே
தெரிகிறது
இருந்தவற்றின் மகத்துவம்.
தொலைகாட்சியில்
தொலையாத கண்கள்.
செயற்கையாய்
செய்யப்படாத காற்று.
மனம் விட்டு
மனைவியிடம் பேச நேரம்.
குழந்தையோடு
சிறு விளையாட்டு.
மொட்டைமாடியில்
விண்மீன் எண்ணி
நிலவை ரசிக்கப் பொழுது.
கூடவே ஒரு கவிதை.
மின்சாரம் இல்லாத
இரவின் கொடை.
மறதியால் படும்
துன்பம் புலம்புகிறான்.
புலம்பத் தோன்றுகிறது
மறக்க முடியாமல்
படும் துன்பம்.
இன்றின் புதுமையாய்
கண்டறியப்படுகின்றன
நேற்றின் பழமைகள்…
இன்றின் புதுமைகள்
கண்டறியப்படும்
நாளைய பழமையாய்…
கச்சிதமாய்
வரையப் பட்ட
வட்டத்தில்
கண்டறிய முடிவதில்லை.
முதல் எது?
முடிவு எது?
தோட்டத்தில் இருந்தோம்
அப்பாவும் நானும்.
‘தண்ணீர் விட்டேன்
நன்றியாய் பூக்கின்றன ‘
எனச் சொல்லி
கோடிட்ட இடமாய்விட்டார்.
அவர் உணவில்
வளர்ந்த
என்னை நோக்கி…
‘பூக்கள் தனக்கே பூக்கின்றன
உங்களுக்கென்றால் திருட்டு’
என்று நிரப்பிக் கொண்டேன்
தம்பிக்கும் எனக்கும்
ஒரே தரத்தில், நிறத்தில்,
துணி எடுத்து
ஒரே இடத்தில்
ஒன்றே போல் தைத்தாலும்
என் சட்டை அவனுக்கழகு
அவன் சட்டை எனக்கழகு.
அருவி நீர் தான்
ஆற்றிலும்
ஆனாலும்
ஆற்றில் இல்லை
அருவியின் வேகம்
இரண்டு நாளுக்கு முன்பு தினத் தந்தியில் ஒரு செய்தியைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை.
வேறு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விட்டுப் போனவர்களை இணைக்கும் இறுதி முயற்சியாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்திருந்தது . அதில் ஒன்று செல்பேசி எண், மற்றொன்று தொலைபேசி எண். 8ம் தேதி கடைசி நாள் அதற்குள் அந்த எண்களுக்கு பேசினால் வீடு தேடி வந்து வாக்காளர் பட்டியலில் உங்களை இணைத்துக் கொள்வார்கள் என்றது அந்த செய்தி.
நமது நாடு [...]
இரண்டாய் வருகிறது
எல்லாம்.
ஊசலாடி
ஒன்றைத் தேர்ந்தெடுத்து…
தொட்டதை விட
விட்டது நலமென்று
பாதியில் அலைக்கழிந்து…
விட்டது தொட்டு
தொட்டது விட்டு
கொஞ்சம் நகர்ந்து…
பின்னது விடவும்
முன்னதே நலமென்று அழுது..
ஒன்றைப் பற்றி
ஒன்றை மறந்தவருக்கு
அவதிகள் இல்லை அதிகம்
வெளிச்சத்தில் இருந்தேன்
சொல்லாமல் விளக்கணைய
இருள் கண்டதும்
கண் திகைத்தது.
நேரம் போக
பழகிப் போனது இருள்.
பின்னும்
வெளிச்சம் வர
திகைத்தது கண்.