01.09.08 தீராநதி நேர்காணல்
உலகெங்கும் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படும் பிரச்சினை சுற்றுச் சூழல் பிரச்னை. இதையொட்டி ஆக்கபூர்வமான இயக்கப் பணிகளை தமிழில் பல குழுக்கள் செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத் தகுந்த குழுவாக `பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சொல்லலாம். நெடுஞ்செழியனின் பங்களிப்பில் இயங்கிய இக்குழு அவரது மறைவிற்குப் பிறகு கொஞ்சம் தேக்கம் கண்டது. இதனுடன் இணைந்து செயலாற்றிய காளிதாஸ், இப்போது தன் நண்பர்களுடன் சேர்ந்து
`ஓசை’ என்ற சுற்றுச் சூழல் இயக்கத்தை இயக்கி வருகிறார்.
ஆரம்பக் காலங்களில் திராவிட இயக்க [...]
செப்டம்பர் 29, 2008
பகுப்புகள்: அறிமுகம், அலசல், எண்ணங்கள், பகிர்தல் . குறிச்சொற்கள்: ஓசை காளிதாசன், சுற்றுச்சூழல், தீராநதி, நேர்காணல், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
உறுப்புகள் உயிரல்ல
சவத்திடமும் உறுப்புகள்…
இயக்கம் உயிரல்ல
சுழலும் மின்விசிறி…
புருவம் கேள்விக்குறியாய்?
பின் எது
தேடினேன்… தேடினேன்
தேடல் உயிர்ப்பு.
செப்டம்பர் 26, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
உற்றார், உறவினர்கள்
ஊரிலிருந்து வரும் வரை
வாகனங்களும்
மனிதர்களும்
மாடுகளும்
இடைவிடாது
கடக்கும் தெருவில்
சின்னதொரு பந்தலிட்டு
நாற்காலிகளில்
ஓரமாய் அமர்ந்து
காத்திருக்கின்றன…
வாடகை வீட்டுப் பிணங்கள்.
செப்டம்பர் 24, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
அனுதினமும்
அடிகிற அம்மாவைக் காட்டிலும்
ஆண்டுக்கொரு முறை
அடிக்கிற
அப்பாவின் முறைப்பில்
நடுங்குகின்றன குழந்தைகள்.
செப்டம்பர் 20, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: கவிதை, கவிதை.இலக்கியம், கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
அகால அழைப்புமணியென
திடுமென வரும்
ஊர் மாற்றல் உத்தரவு.
பொருட்களோடு லாரியில்
ஏறும் போது
பொங்கும்
அப்பா அம்மாவின்
கண்ணீரில் இருக்கும்
அத்தனை வருசம்
பழகியவர்களைப் பிரியும் வலி.
குறிப்பாய்
அரசுக் குடியிருப்பின்
வீட்டு முற்றத்தில்
வேலி அடைத்து
வியர்வை சிந்தி
உண்டாக்கிய
ரோஜாக்களையும்,
டேலிகாப் பூக்களையும்
டிசம்பர் பூவோடு
கனகம்பர மல்லிகளையும்
புதினா, கொத்த மல்லிகளையும்
துளசி செம்பருத்தியையும்
மரமாகப் போகும்
கருவேப் பிள்ளையையும்
அவரை, பூசணிக் கொடிகளையும்
இன்னும்
இதர தாவர வர்கங்களால்
நிறைந்த தோட்டத்தை
பிரியும் வலி.
பாதிப் பயணத்தில்
அம்மா சொல்லும்
போதுமுடா சாமி
தோட்டம் போட்டதும்
செடி வளத்துனதும்
போற இடத்தில
செவனேனு இருக்கணும்
இனிமே
மண்ண கிண்டிகிட்டு
கெடக்க கூடாது.
அப்பாவின் தலையாட்டல்
அதை ஆமோதிக்கும்.
ஆனாலும்
அங்கிருந்து கிளம்பும் போதும்
இருக்கும்
பிரிய ஒரு தோட்டம்…..
செப்டம்பர் 18, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
படித்துத் தீராமல்
புத்தகங்கள்.
பார்த்துத் தீராமல்
காட்சிகள்.
கேட்டுத் தீராமல்
செய்திகள்.
நாம் தீர்ந்தாலும்
இவை தீரா…
பெரும்பரப்பாய் கடல் இருந்தும்
அவசியமானதை
அளந்து முகரும் மேகம்….
செப்டம்பர் 10, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
எந்த நொடியிலாவது
தோற்றாக வேண்டும்.
மரணம் பயமில்லை.
இனி
அடங்கலாமா?
அடக்கலாமா?
செப்டம்பர் 9, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
எத்தனைமுறை உச்சரித்தும்
எத்தனையோ பேருக்கு
முகவரியாய் எழுதித் தந்தும்
பெயர்ப் பலகையின்
கீழ் அமர்ந்து
அரட்டை அடித்தும்.
யார் வைத்தது
எப்படி வந்தது
பொருள் என்ன?
நண்பன் கேட்கும் வரை
எனக்குத் தோன்றவில்லை.
ஊர்ப் பெயர் ஆராய.
செப்டம்பர் 8, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
சுபம் போட்ட பின்னும்
தொடர்கின்றன..
தொடரும் என
அறிவித்தும்
முடிந்து போகின்றன…
கதைகளைப் போலில்லை
வாழ்க்கை.
செப்டம்பர் 6, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
எப்போதும் உண்டு
முதல்துளி துவங்கி
கடைசித் துளி வரை
குளிரக் குளிர
மழை அனுபவிக்கும் ஆசை.
கிடைக்கவில்லை
அம்மாவின் அடிக்குப் பயந்த
அந்த வயது முதல்
ஊரார் கேலிக்கு அஞ்சும்
இந்த வயது வரை.
அறிந்து வைத்து
அவ்வப்போது
ஒதுங்க வழியில்லாத
ஓரிடத்தில்
வந்து நனைக்கும் மழை.
செப்டம்பர் 2, 2008
பகுப்புகள்: கவிதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், தமிழ், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி