எப்போதும் உண்டு
முதல்துளி துவங்கி
கடைசித் துளி வரை
குளிரக் குளிர
மழை அனுபவிக்கும் ஆசை.
கிடைக்கவில்லை
அம்மாவின் அடிக்குப் பயந்த
அந்த வயது முதல்
ஊரார் கேலிக்கு அஞ்சும்
இந்த வயது வரை.
அறிந்து வைத்து
அவ்வப்போது
ஒதுங்க வழியில்லாத
ஓரிடத்தில்
வந்து நனைக்கும் மழை.



மழையின் சுவடுகள்