காத்திருக்கும் பிணங்கள்

உற்றார், உறவினர்கள்
ஊரிலிருந்து வரும் வரை
வாகனங்களும்
மனிதர்களும்
மாடுகளும்
இடைவிடாது
கடக்கும் தெருவில்
சின்னதொரு பந்தலிட்டு
நாற்காலிகளில்
ஓரமாய் அமர்ந்து
காத்திருக்கின்றன…
வாடகை வீட்டுப் பிணங்கள்.