ஹைகூத் தோட்டம் – 18

பழைய கடிதங்களை எடுக்கிறேன்
உடனே ஒட்டிக் கொள்கிறது
அடுக்கடுக்காய் நினைவுகள்

ஹைகூத் தோட்டம் – 17

கையில் புத்தகம்
விரைவாய் முடியாதா
சப்தங்கள்..

ஹைகூத் தோட்டம் – 16

செழித்த பசுமையில்
அலங்காரப் புல்வெளி
சுவரொட்டி மேயும் பசு

ஹைகூத் தோட்டம் – 15

இந்த அழகிய மின்னலைப்
பத்திரப்படுத்தி வைக்கிறேன்
கவிதை எழுதி…

ஹைகூத் தோட்டம் – 14

உருவமில்லை ஓசையில்லை
அவசரமாக அழைக்கிறது
எங்கிருந்தோ பூவாசம்

ஹைகூத் தோட்டம் -13

இன்னும் பூவாசை
கொழிக்கும் பூச்செடி
சமாதியில்..

ஹைகூத் தோட்டம் – 12

குடங்களில் பால்
புற்றுக்கு பாலபிஷேகம்
பட்டினியில் கன்றுகள்

ஹைகூத் தோட்டம் – 11

கலைந்தது தூக்கம்
இனி எப்போது
அழகியகனவின் தொடர்ச்சி…

ஹைகூத் தோட்டம் – 10

விண்மீன்கள் இல்லா இரவை
ஈடு கட்டுகிறது
மின்மினிகள்.

ஹைகூத் தோட்டம் – 9

பட்டினியால் இறந்தவனுக்குக்
கேட்காமல் கிடைக்கிறது
வாய்க்கரிசி.