அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.
என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .
என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.
பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.
15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.
ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் [...]
பெப்ரவரி 24, 2009
பகுப்புகள்: அனுபவம், அறிமுகம், அலசல், இலக்கியம், எண்ணங்கள், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: கட்டுரை, பொன்.சுதா, அன்புமதி, வலைப்பதிவு, அனுபவம், இலக்கியம், வாழ்க்கை, பகிர்தல், தமிழ்பதிவு, பதிவுகள், கதை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
01.09.08 தீராநதி நேர்காணல்
உலகெங்கும் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படும் பிரச்சினை சுற்றுச் சூழல் பிரச்னை. இதையொட்டி ஆக்கபூர்வமான இயக்கப் பணிகளை தமிழில் பல குழுக்கள் செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத் தகுந்த குழுவாக `பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சொல்லலாம். நெடுஞ்செழியனின் பங்களிப்பில் இயங்கிய இக்குழு அவரது மறைவிற்குப் பிறகு கொஞ்சம் தேக்கம் கண்டது. இதனுடன் இணைந்து செயலாற்றிய காளிதாஸ், இப்போது தன் நண்பர்களுடன் சேர்ந்து
`ஓசை’ என்ற சுற்றுச் சூழல் இயக்கத்தை இயக்கி வருகிறார்.
ஆரம்பக் காலங்களில் திராவிட இயக்க [...]
செப்டம்பர் 29, 2008
பகுப்புகள்: அறிமுகம், அலசல், எண்ணங்கள், பகிர்தல் . குறிச்சொற்கள்: ஓசை காளிதாசன், சுற்றுச்சூழல், தீராநதி, நேர்காணல், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
இரண்டு நாளுக்கு முன்பு தினத் தந்தியில் ஒரு செய்தியைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்கவில்லை.
வேறு ஒன்றுமில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விட்டுப் போனவர்களை இணைக்கும் இறுதி முயற்சியாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்திருந்தது . அதில் ஒன்று செல்பேசி எண், மற்றொன்று தொலைபேசி எண். 8ம் தேதி கடைசி நாள் அதற்குள் அந்த எண்களுக்கு பேசினால் வீடு தேடி வந்து வாக்காளர் பட்டியலில் உங்களை இணைத்துக் கொள்வார்கள் என்றது அந்த செய்தி.
நமது நாடு [...]
ஆகஸ்ட் 4, 2008
பகுப்புகள்: அனுபவம், அலசல், எண்ணங்கள், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: அனுபவம், கட்டுரை, தமிழ்பதிவுகள், பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிவிட்டது என்று அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தோம். வண்டியின் பின்புறம் ஏறிய படியே அன்புமதி கேட்டாள்.
‘ அப்பா அச்சுங்கிறது பொண்ணுகளுக்கு வைக்கிற பேரா? ‘
மலையாளப் படம் ‘ அச்சுவின்ட அம்மா ‘ பார்த்தது நல்லதாகிப் போனது.
‘ ஆமா பாப்பா பொண்ணுக பேரு தான். கேரளாவில வைப்பாங்க… ‘ என்றதும் உடனேயே
‘ ஏம்பா அந்தப் பேரப் போய் வைக்குறாங்க? ‘ என்றாள் ரெம்பக் கவலையாக.
ஒன்றும் புரியாமல் ‘ ஏன் அந்தப் பேருக்கு என்ன குறைச்சல்’ என்றேன்.
[...]
ஜூன் 30, 2008
பகுப்புகள்: அனுபவம், எண்ணங்கள், பகிர்தல் . குறிச்சொற்கள்: பொன்.சுதா, அன்புமதி, அனுபவம், பகிர்தல், தமிழ்பதிவு . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
அப்பா ரிட்டையர்ட் ஆவதற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.
ஓய்வு பெறும் போது அலுவலகத்தில் நடக்கும் பிரிவு உபச்சார விழாவில் நான், தம்பி, அக்கா அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப் பட்டார். ஓய்வு பெற்றாலும் பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு என்று ஆறுதல் கொள்ளவாக இருக்கும்.
மனைவிக்கு விடுமுறை எடுப்பதில் தான் பிரச்சனை. அந்தக் கம்பெனியில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது. எனவே [...]
மார்ச் 10, 2008
பகுப்புகள்: அனுபவம், அலசல், இலக்கியம், எண்ணங்கள், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: அன்புமதி, இலக்கியம், கட்டுரைகள், தமிழ், தமிழ் பதிவுகள், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.
நானென்ன புத்தனின் தந்தையா? கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். [...]
பெப்ரவரி 15, 2008
பகுப்புகள்: அனுபவம், எண்ணங்கள், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: கட்டுரை, பொன்.சுதா, அன்புமதி, அனுபவம், இலக்கியம், மரணம், வாழ்க்கை, தமிழ் பதிவு, வலைப் பதிவு, தமிழ், கட்டுரைகள், இலக்கியம் குழந்தை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
எனது காதல் கவிதைத் தொகுப்பான ‘கவிதை அல்ல காதல் ‘ நூல் வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ல் 98ம் வருடம் கோவையில் நடந்தது.
அண்ணன் அறிவுமதியும், அண்ணன் பழநி பாரதியும் சிறப்பு விருந்தினர்கள்.மாலை 3 மணிக்கு விழா.
இடம் ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் திவ்வோதயா அரங்கம்.
‘விழா நேரத்திற்கு முன்பே கூட்டம் வரத் துவங்கி விட்டது. விரைவாகவே அரங்கம் நிறைந்து விட்டது.
அண்ணன் பழநிபாரதி சாய்பாபா காலனியின் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
கூட்டம் அதிகமாகி விட்டதால் [...]
பெப்ரவரி 10, 2008
பகுப்புகள்: அனுபவம், அலசல், எண்ணங்கள், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: அனுபவம், கட்டுரை, கட்டுரைகள், காதலர் தினம், காதல், கோவை, தமிழகம், தமிழ்பதிவுகள், நூல், பொன்.சுதா, வலைப்பதிவு, விழா, வெடிகுண்டு . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
“அப்பா எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பீங்க” கேட்டது என் மகள் அன்புமதி.
ஒரு நொடி அதிர்ச்சியும் உடனே சிரிப்பும் தான் வந்தது. இதில் என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்குது என்கிறீர்களா?
என் மகளுக்கு 5 வயது.
பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அந்தக் கேள்வியை கேட்டு விட்டு பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள் அன்புமதி.
இது இடைவிடாது கேள்விகள் கிளைவிடும் காலம் என்பதை அறிந்திருந்ததால் அன்புமதியை புரிந்து கொள்ள முடிந்தது.
பொதுவாக குழந்தைகள் தனக்குப் புதிராய்த் தோன்றும உலகத்தை, உலகத்தின் நடைமுறையை,பழக்க வழக்கங்களை [...]
பெப்ரவரி 7, 2008
பகுப்புகள்: அனுபவம், எண்ணங்கள், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: அன்புமதி, எண்ணங்கள், கட்டுரை, கட்டுரைகள், தமிழ்பதிவுகள், பொன்.சுதா, வலைப்பதிவு . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்