பெயர்க் காரணம்

“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.
நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.
‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.
அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் [...]

கறுப்பு வெள்ளை உலகம்

அன்புமதி திடிரென அந்தக் கேள்வியைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.
கொஞ்ச நேர சிரிப்புக்குப் பின் தான் பதில் சொல்ல முடிந்தது.
அன்புமதி எனது 6 வயது மகள்.
சிறிய வயதில் இருந்து சில கேள்விகளால் என்னை வியப்பில் ஆழ்த்துவாள்.
செத்துப் போறதுன்னா என்னாப்பா,என்பது போன்ற கேள்விகள்.
நான் விளக்கமாய் உண்மையான பதில்களைச் சொல்லுவேன்.
அவைகளை பதிவுகளாகவும் போட்டிருக்கிறேன்.
இப்போது வளர வளர கேள்விகள் குறைந்து வருகிறதோ? சிந்திக்க நேரமில்லாமல் தொலைக்காட்சியும் , விளையாட்டும் மூளையில் நிறைந்து போனதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்படிக் [...]

ஒரு நண்பன்

அலுவலுகத்திற்கு தாமதமாகி விட்டதால் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கும் போது என் பெயரை உரிமையுடன் அழைத்தது ஒரு குரல். குரலின் திசையில் திரும்பும் முன் ஓடி வந்து என் கைகளை பற்றி கொண்டன உறுதியான கரங்கள். பார்த்தால்,முகம் மலர நிற்கிறான் தர்மராஜ்.அவனை பார்த்து எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். மீண்டும் அவனை சந்திப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.
கோவை அரசுகலைக்கல்லூரி மாணவர் விடுதியில் முதலாண்டில் நான், தர்மராஜ், சுந்தர மூர்த்தி மூவரும் ஒரே அறையில் தங்கிப் படித்தோம். தர்மராஜ் [...]

நன்றி அறிவித்தல்

நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும் இன்னும் நினைவில் இருக்கிறது பதட்டமான அந்த இரவுப் பொழுது. நான் ஏறிய பாடாவதிப் பேருந்து ஆமை வேகத்தில் இரவு 11.30 க்கு பொள்ளாச்சி வந்து சேர்வதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பே எனது ஊருக்கான கடைசி வண்டி கிளம்பி இருந்தது. இனி அதிகாலை 5 மணி வரை காத்திருப்பது தவிர வேறு வழி இல்லை. பேருந்து நிலையத்தில் கூட்டம் நிறைய இருந்தது. பெரும்பாலும் என்னைப் போல முழுஆண்டுத் [...]

காதல் கொண்ட பெண்மை

குரல் காதில் விழுவதற்கு முதல் நொடியில் கூட பேசுவது
அமுதாவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஹலோ’
என்ற ஒரே வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டேன். சென்னைக்கு
வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நான் கல்யாணத்திற்கு வரவில்லை என்ற கோபத்தில் தொலைபேசி எண், முகவரி எல்லாம் இருந்தும் வைராக்கியமாய் அவள் தொடர்பு கொள்ளவே இல்லை.
தினந்தோறும் எதிர்ப்படும் முகங்களில் அவள் இருந்து விடமாட்டாளா எங்காவது துணிக்கடையில் துணி வாங்கிக் [...]

ஆத்தா

‘சமயா, பேச்சியம்மா, எல்லாருக்கும் கைகால் சொகத்தக் குடு. என் பேரப்பிள்ளைக நல்லா படிச்சு, நல்லா இருக்கணும்’ சாமிரூமில் ஆத்தா மனமுருகிப் பிரார்த்தித்தை டேப் ரெக்கார்டர் மீண்டும் சொல்லியது. ஆத்தாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதையே ஓடவிட்டேன். ‘அடியாத்தே’ என்று ஆத்தா கன்னத்தில் விரல்களை வைத்துக் கவனித்தது. நான்,தம்பி, அப்பா, அம்மா, எல்லோரும் சிரித்தோம்.
ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு ஆத்தா [...]

போலீஸ்

எந்த முகத்தை வாழ்வில் இன்னொருமுறை பார்த்து விடக் கூடாது
என்று நினைத்தேனோ அந்த முகம் வந்து நின்றது. வயதான,
கம்பீரமான, மீசை முறுக்கிய போலீஸ் முகம். வகுப்பை கட்டடித்து விட்டு படம் பார்க்கவந்த சந்தோசமெல்லாம் சட்டென்று வடிந்து போய் விட்டது. தியேட்டரின் உள் நுழைந்து சிறிது தூரத்தில் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டு நின்றிருக்கிறது காவல்முகம்.
நான் தான் பார்த்தேன். அவர் பார்க்கவில்லை. பார்த்து விடும் முன்
அப்படியே மறைந்து விட விருப்பம் இருந்தும் முடியாமல் வித்துக்
கொண்டிருந்தேன். சட்டென்று வியர்த்துப் [...]

நுழை வாயிலில்…

சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.
சென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.
இன்னும் அரை மணி நேரத்தில் [...]

அவன்

ஓவியக் கல்லூரியை நோக்கி கார் முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் விழாவிற்கு எங்கள் இயக்குனர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருக்கிறார். தலை போவதால் தவிர்க்க முடியாமல் வாலாக நானும் உடன் சென்று கொண்டிருந்தேன். இரட்டைவாலாக என் இனமாகிய உதவி இயக்குனர் ஒருவரும் உடன் வந்து கொண்டிருந்தார்.
உதவியாளர்கள் அருகில் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது சில இயக்குனர்களால். பாத்ரூம் போவது, மனைவியிடம் போவது தவிர மற்ற நேரமெல்லாம் உதவியாளர்கள் உடன் இருக்க வேண்டும். [...]

கோபத்தின் முகங்கள்

கொடுமையான காத்திருப்பாய் இருந்தது. என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதன் உச்ச கட்டமாய் அப்பாவின் வருகைக்கான காத்திருப்பு.
அடிபட்ட இடங்கள் வலித்துக் கொன்றன. வீங்கிய பகுதிகளை கைகள் அனிச்சையாய் தேய்த்துக் கொடுத்தன. நண்பர்கள் வலி தாங்கிய முகத்தோடு அமைதியாய் இருந்தார்கள்.
பவர் ஹவுஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிற்கு தகவல் சொல்லப் பட்டுவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார். வந்து என்ன செய்வார் என்பதை ஊகிக்க முடியவில்லை.
சாமி வருவது போல் வரும் அப்பாவுக்குக் [...]