ஹைகூத் தோட்டம் – 56

மரக்கிளையில் காத்திருக்கின்றன
சின்னஞ்சிறு குஞ்சுகள்
கூண்டுக்குள் தாய் .

ஹைகூத் தோட்டம் – 55

இன்னும் தொடரும் வாழ்வு
ஆழப் பாய்ந்த கத்தி
அவள் பிரிவு….

ஹைகூத் தோட்டம் – 54

உள்ளே வெளியே விளையாட்டு
சலிக்காமல் விளையாடுகிறது
என் வீட்டு நகைகள்…

ஹைகூத் தோட்டம் – 53

பறக்கும் கிளிக் கூட்டம்
இடம் மாறும் கிளிகள்
திருத்தி வரைதலா

ஹைகூத் தோட்டம் – 52

லஞ்சம் கொடுத்தேன்
கிடைத்தது பதவி
மனைவி

ஹைகூத் தோட்டம் – 51

ஆடுகள் கூடி தேர்ந்தெடுக்கின்றன
நல்ல பலி பீடத்தை
தேர்தல் நாள்

ஹைகூத் தோட்டம் – 50

கரைக்குத் தள்ளுகிறது அலைகள்
நகர மறுக்கிறது
நடுக்குளத்தில் நிலா.

ஹைகூத் தோட்டம் – 49

திசை தெரியா பயணம்
இறகின்றி பறக்கின்றன
இலையுதிர்கால சருகுகள்…

ஹைக்கூத் தோட்டம் – 48

சீக்கிரம் தேர்ந்தெடு
இருப்பதில் சிறந்ததை
எல்லாம் போலிகள்

ஹைகூத் தோட்டம் – 47

சிறைப் பிடித்த மின்மினி
தப்பிப் பறக்கிறது
மீண்டும் இருள்..