அன்புமதி திடிரென அந்தக் கேள்வியைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.
கொஞ்ச நேர சிரிப்புக்குப் பின் தான் பதில் சொல்ல முடிந்தது.
அன்புமதி எனது 6 வயது மகள்.
சிறிய வயதில் இருந்து சில கேள்விகளால் என்னை வியப்பில் ஆழ்த்துவாள்.
செத்துப் போறதுன்னா என்னாப்பா,என்பது போன்ற கேள்விகள்.
நான் விளக்கமாய் உண்மையான பதில்களைச் சொல்லுவேன்.
அவைகளை பதிவுகளாகவும் போட்டிருக்கிறேன்.
இப்போது வளர வளர கேள்விகள் குறைந்து வருகிறதோ? சிந்திக்க நேரமில்லாமல் தொலைக்காட்சியும் , விளையாட்டும் மூளையில் நிறைந்து போனதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்படிக் கேட்டாள்.
கேள்வி இது தான்.
‘ அப்பா கறுப்பு வெள்ளை படங்கள் வந்த போது இந்த உலகம் கறுப்பு வெள்ளையாகவா இருந்தது ?’
இல்லை எல்லா செயல்களுடன் அவள் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்ற மகிழ்வுடன் அன்புமதியின் கேள்விகான பதிலை சொன்னேன்.
2 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
உங்கள் மகளின் கேள்வி http://www.dynamicobjects.com/d2r/archives/002067.html என்ற உரையாடலை நினைவுபடுத்துகிறது. 🙂
நன்றிங்க சுந்தர்.
படித்துப் பார்க்கிறேன்.