எனது இரண்டாவது குறும்படமான ‘நடந்தகதையின்’ அறிமுகவிழா 08 08 09 அன்று சென்னை பிலிம்சேம்பரில் நடைபெற்றது.
அரங்கம் நிறைந்து வழிந்தது. நண்பர்கள் திரை இலக்கிய கலை ஆர்வலர்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, தோழர் விடுதலை ராஜேந்திரன், இயக்குநர் சசி, எழுத்தாளர் அழகிய பெரியவன், ஓசை காளிதாசன் போன்ற பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இயக்குநர் மு.காந்தி வரவேற்றார். கவிஞர் அவைநாயகன் நிகழ்வை
தொகுத்து வழங்கினார்… ஏற்புரையை நான் சொன்னேன்.
நன்றியை நடந்தகதையின் தயாரிப்பாளர் அருள்சங்கர் சொன்னார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக ‘நடந்தகதை’ திரையிடப்பட்டது.
படம் முடிந்து துவங்க்கிய பலத்த கைதட்டல் சில நிமிடங்கள் தொடர்ந்தது பார்வையாளர்களின் மனநிலையைப் பிரதிபலித்தது.
விழா முடிந்ததும் வந்து தழுவி கைகுலுக்கிய நண்பர்களின், பார்வையாளர்களின் கைகளின் அழுத்தத்தில் அவர்களது நிறைவை உணர முடிந்தது..
ஒரு குறும்பட அறிமுகவிழா இத்தனை சிறப்பாகவும் அரங்கு நிறைந்த கூட்டத்தோடு எப்படி நடக்க முடிந்தது என்ற கேள்வியே இந்தவிழாவின் வெற்றி…
மேலும் விழாவைப் பற்றியும் ‘நடந்தகதை’ பற்றிய விமர்சனத்தையும் அறிமுகத்தையும் பின்வரும் இணைப்புகளில் காணலாம்..
http://www.thenaali.com/thenaali.aspx?A=678
மேலும் இந்த குறும்படத்தின் குறுந்தகடை (டிவிடி) வாங்க விரும்புவர்கள் மற்றும் செய்திகளோ தகவல்களோ பெற விரும்புபவர்கள் ponsudhaa@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.
3 பின்னூட்டங்கள்
Comments RSS TrackBack Identifier URI
படம் எதைப் பற்றியது, எழுத்தாளர் யார், இசை யார் என்கிற விவரங்கள் இருந்தால் குறுந்தகடு வாங்கும் ஆசையை அது தூண்டும். ஏதாவது ஒரு குறும்படத்துக்கு இசை அமைக்க வேண்டும் என்பது என் ஆசை!
http://kgjawarlal.wordpress.com
Jawahar
இந்தப் பதிவின் கடைசியில் கொடுத்துள்ள இணைப்புகளில் விவரங்கள் இருக்கின்றன. பார்க்கவும்.
உங்கள் லட்சியத்தில் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள்!