சிறந்த இந்திய குறும்படமாக ‘ நடந்த கதை’ தேர்வு

தீபிகா மற்றும் தமிழக செய்தி ஊடகத்துறையும் நடத்திய சர்வதேச குறும்படவிழா (ISFFI 2010 ) மார்ச் 20, 21ம் தேதிகளில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்து முடிந்தது.

இந்தப் போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 420 குறும்படங்கள் கலந்து கொண்டன.

இறுதி போட்டிக்கு 70 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அனிமேசன் படங்கள், ஆவணப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

70 படங்களும் 20-21 தேதிகளில் காலை முதல் மாலை வரை திரையிடப்பட்டன.

பெரும்பாலும் காட்சி ஊடகத்துறை மாணவ, மாணவிகளால் நிறைந்திருந்தது ஆல்பர்ட் தியேட்டர்.

போட்டிகள் 2 பிரிவாக நடைபெற்றது. சர்வதேச அளவிலான படங்களுக்கான போட்டி மற்றும் இந்திய

அளவிலான குறும்படங்களுக்கான போட்டி என்று நடைபெற்றது.

ஸ்பெயின், ஆஸ்திரிலேயா, அமெரிக்கா, ஹங்கேரி, இங்கிலாந்து பிரஞ்ச், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா,
சுவிஸ்சர்லேண்ட், கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டன.

இந்திய அளவிலான போட்டிகளில் கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா,

குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து குறும்படங்கள் கலந்து கொண்டன.

இந்திய அளவில் சிறந்த குறும்படமாக தமிழ் குறும்படமான ‘ நடந்த கதை’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது
அளிக்கப் பெற்றது.

இது நடந்த கதை வெளியான 6 மாதங்களுக்குள் அது பெறும் 5 வது விருது ஆகும்.

’ நடந்த கதை ’ பொன்.சுதாவாகிய என்னால் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கப்பட்ட 21 நிமிட
குறும்படம்.

இதன் கதை அழகிய பெரியவன். அவர் எழுதிய ’குறடு’ சிறுகதையே ‘ நடந்த கதை’ யாக உரு மாற்றம்
ஆனது.

இப்படத்தை அருள் சங்கர் தயாரித்துள்ளார். நிறுவனம் நண்பர்கள் திரைகுழுமம்.

ஒளிப்பதிவாளர் இராசாமதி ( சக்கரைக்கட்டி, சித்து +12, பேசு, குறுநில மன்னர்கள்).

படத்தொகுப்பு ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)

இசை மரியா மனோகர் ( நாயகன் மற்றும் ஈழம், நேதாஜி தொடர்)

கதை சொல்லியின் குரல்- கவிஞர். அறிவுமதி.

கதை நாயகன் கருணாகர்.

நடந்த கதையில் இடம் பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், மற்றும் இதன் வெற்றிக்குத் துணை நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் நெகிழ்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக் குறும்படத்தை காண விரும்புவர்கள் இதன் குறுந் தகடை வாங்கிப் பயன் பெறலாம்.

நடந்த கதையின் குறுந்தகடு சென்னையில் நியூ புக் லேண்ட்ஸ், டிஸ்கவரி பிக் பேலஸ் போன்றவற்றில் பெறலாம்.

கோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.

தபாலில் பெற விரும்புபவர்கள் – 9444324316 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள ponsudhaa@gmail.com என்ற முகவரியைப் பயன்படுத்தவும்.

8 பின்னூட்டங்கள்

  1. என் அன்பு சுதா..

    உன் ஒவ்வொரு வெற்றியிலும்,நானே வென்றதாய் மகிழ்வதை மறைக்கமுடியவில்லை.ஒரு தோழியாக உனக்கு உள்ளேயும் உனக்கு வெளியேயும்..உனை தொடர்கிறேன் மகிழ்வைக்கொண்டாடும் சுயநலத்துடன்.

    வாழ்த்துக்கள்.

  2. வாழ்த்துகள்…

    தோழர் நீங்கள் விரைவில் வென் திரையில் பிரகாசிக்க வாழ்த்துகள்…

  3. மிகுந்த மகிழ்ச்சி பொன். சுதா. வாழ்த்துக்கள். இந்த படம் உரத்த சிந்தனை நிகழ்வில் பார்த்து நான் பிரமித்து அமர்ந்தது இன்னும் நினைவில் உள்ளது. நீங்கள் இன்னும் மேலே செல்ல வாழ்த்துக்கள்

  4. pon sudha,

    neengal kovai govt arts collegil padithavaraa.

    ungalai angu paarthathu pol ulladhu.

    vivarm sollungal.

  5. pon sudha,

    neengal kovai govt arts collegil padithavaraa.

    ungalai angu paarthathu pol ulladhu.

    vivarm sollungal.

  6. உங்கள் தளத்தை இப்போதுதான் காண வாய்ப்பு கிடைத்தது . மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    நீங்கள் மென்மேலும் வளர ,புகழ் பெற வாழ்த்துக்கள் சுதா

    விஜயராகவன்


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்