ஹைகூத் தோட்டம் – 46

webfishss

பொரி அள்ளிப் போட்டேன்

பசியில் குளத்துமீன்கள்

தயாராய் தூண்டில்.

ஹைகூத் தோட்டம் – 45

fox_hunting

துப்பாக்கி சுமந்து

வேட்டைக்கு கிளம்புகின்றன

விலங்குகள்…

ஹைகூத் தோட்டம் – 44

artsgreennatureorangepaintingyellow-a9d0ac82cf3293c49e2873783723c03c_h

வரைந்தவன் பெயரில்லை

அழகழகான ஓவியங்கள்

வானிலும் மண்ணிலும் …

ஹைகூத் தோட்டம் – 43

111813866_278c52115f

பசியில் கதறும் குஞ்சுகள்

உணவோடு தவிக்கும் தாய்பறவை

விரட்டும் தீபாவளி வெடிச்சப்தம்.

ஹைகூத் தோட்டம் – 42

2539528900103830173s600x600q85

மொட்டைமாடிச் சிறுமி

லயித்த விளையாட்டு

உருமாறும் மேகம்…

ஹைகூத் தோட்டம் – 41

031706_bird_reflections

ஆற்றுநீரை உரசிப்

பறக்கும் கொக்கு

ரசிக்கிறதா தன்னழகை.

ஹைகூத் தோட்டம் – 40

moon_treetops_clouds_8001

மார்கழிப் பனிஇரவு

என்ன குளிர்

மேகத்துக்குள் நிலா .

ஹைகூத் தோட்டம் – 39

2586605731_3ff0a8af23

உரிமையாய் கட்டுகின்றன

கூடுகளை பறவைகள்

எச்சத்தில் முளைத்த மரம்.

ஹைகூத் தோட்டம்- 38

birdsonorange1280x1024

கூடடையும் மாலை நேரம்

தேவைகள் ஏதுமின்றி

ரசித்து சிறகடிக்கும் பறவைகள்

ஹைகூத் தோட்டம் – 37

8651783-lg

வழியெங்கும் அற்புதப் பசுமை

கிடைக்காத ஜன்னல் பயணம்

வீணடிக்கும் உறக்கம் .

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்