ஹைகூத் தோட்டம் – 49

1069894525_c570d769a0

திசை தெரியா பயணம்

இறகின்றி பறக்கின்றன

இலையுதிர்கால சருகுகள்…

ஹைக்கூத் தோட்டம் – 48

6203176019z

சீக்கிரம் தேர்ந்தெடு

இருப்பதில் சிறந்ததை

எல்லாம் போலிகள்

ஹைகூத் தோட்டம் – 47

firefly1

சிறைப் பிடித்த மின்மினி

தப்பிப் பறக்கிறது

மீண்டும் இருள்..

ஹைகூத் தோட்டம் – 46

webfishss

பொரி அள்ளிப் போட்டேன்

பசியில் குளத்துமீன்கள்

தயாராய் தூண்டில்.

ஹைகூத் தோட்டம் – 45

fox_hunting

துப்பாக்கி சுமந்து

வேட்டைக்கு கிளம்புகின்றன

விலங்குகள்…

ஹைகூத் தோட்டம் – 44

artsgreennatureorangepaintingyellow-a9d0ac82cf3293c49e2873783723c03c_h

வரைந்தவன் பெயரில்லை

அழகழகான ஓவியங்கள்

வானிலும் மண்ணிலும் …

ஹைகூத் தோட்டம் – 43

111813866_278c52115f

பசியில் கதறும் குஞ்சுகள்

உணவோடு தவிக்கும் தாய்பறவை

விரட்டும் தீபாவளி வெடிச்சப்தம்.

ஹைகூத் தோட்டம் – 42

2539528900103830173s600x600q85

மொட்டைமாடிச் சிறுமி

லயித்த விளையாட்டு

உருமாறும் மேகம்…

ஹைகூத் தோட்டம் – 41

031706_bird_reflections

ஆற்றுநீரை உரசிப்

பறக்கும் கொக்கு

ரசிக்கிறதா தன்னழகை.

ஹைகூத் தோட்டம் – 40

moon_treetops_clouds_8001

மார்கழிப் பனிஇரவு

என்ன குளிர்

மேகத்துக்குள் நிலா .

 • எனது கவிதை நூல்கள்


  கவிதை அல்ல காதல்
  வெளியீடு: விஜயா பதிப்பகம்
  நானும் நீயும் நாமான போது
  வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
  வெளியீடு: விஜயா பதிப்பகம்