அரங்கமும் மனமும் நிறைந்த அறிமுகவிழா

எனது இரண்டாவது குறும்படமான ‘நடந்தகதையின்’ அறிமுகவிழா 08 08 09 அன்று சென்னை பிலிம்சேம்பரில் நடைபெற்றது.
அரங்கம் நிறைந்து வழிந்தது. நண்பர்கள் திரை இலக்கிய கலை ஆர்வலர்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது.

Picture 125

Picture 158

Picture 218

Picture 200

Picture 207

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, தோழர் விடுதலை ராஜேந்திரன், இயக்குநர் சசி, எழுத்தாளர் அழகிய பெரியவன், ஓசை காளிதாசன் போன்ற பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இயக்குநர் மு.காந்தி வரவேற்றார். கவிஞர் அவைநாயகன் நிகழ்வை
தொகுத்து வழங்கினார்… ஏற்புரையை நான் சொன்னேன்.
நன்றியை நடந்தகதையின் தயாரிப்பாளர் அருள்சங்கர் சொன்னார்.
Picture153

Picture 166

நிகழ்ச்சியின் துவக்கமாக ‘நடந்தகதை’ திரையிடப்பட்டது.
படம் முடிந்து துவங்க்கிய பலத்த கைதட்டல் சில நிமிடங்கள் தொடர்ந்தது பார்வையாளர்களின் மனநிலையைப் பிரதிபலித்தது.

Picture 117

விழா முடிந்ததும் வந்து தழுவி கைகுலுக்கிய நண்பர்களின், பார்வையாளர்களின் கைகளின் அழுத்தத்தில் அவர்களது நிறைவை உணர முடிந்தது..

ஒரு குறும்பட அறிமுகவிழா இத்தனை சிறப்பாகவும் அரங்கு நிறைந்த கூட்டத்தோடு எப்படி நடக்க முடிந்தது என்ற கேள்வியே இந்தவிழாவின் வெற்றி…

Picture 056

Picture 072

Picture 185

Picture 127

Picture 241

Picture 247

மேலும் விழாவைப் பற்றியும் ‘நடந்தகதை’ பற்றிய விமர்சனத்தையும் அறிமுகத்தையும் பின்வரும் இணைப்புகளில் காணலாம்..

http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=9dcf38c2-cc53-448c-9a93-12d7270312dc&CATEGORYNAME=TCHN

http://www.thenaali.com/thenaali.aspx?A=678

மேலும் இந்த குறும்படத்தின் குறுந்தகடை (டிவிடி) வாங்க விரும்புவர்கள் மற்றும் செய்திகளோ தகவல்களோ பெற விரும்புபவர்கள் ponsudhaa@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.

“நடந்தகதை” குறும்படத்தின் அறிமுக நிகழ்விற்கு அனைவரும் வருக.. வருக..

Aproved

“நடந்தகதை” என்னும் எனது இரண்டாவது குறும்படத்தின் அறிமுகவிழா 08 08 09 சனிக்கிழமை அன்று சென்னை பிலிம் சேம்பரில் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது.

அழகிய பெரியவனின் ‘குறடு’ சிறுகதையை 20 நிமிடப் படமாக்கி உள்ளேன்.

இயக்கம்- பொன்.சுதா

ஒளிப்பதிவு – இராசாமதி (சக்கரைக்கட்டி, புதியவார்ப்புகள், பேசு
படத்தின் ஒளிப்பதிவாளர் )

படத்தொகுப்பு – எ.எல்.ரமேஷ் ( நாடோடிகள் படத்தின் படத் தொகுப்பாளர்)

இசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியின் ஈழம், நேதாஜி தொடர்களின் இசையமைப்பாளர்)

கதை – அழகிய பெரியவன்

தயாரிப்பு – அருள் சங்கர்

அறிமுகவிழாவின் துவக்கத்தில் குறும்படம் திரையிடப்படும்.

அறிமுகவிழாவில்

தலைமை – தோழர் ஆர். நல்லகண்ணு

கருத்துரை-
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
இயக்குநர் சசி ( பூ படத்தின் இயக்குநர் )
தோழர் விடுதலை இராசேந்திரன்
எழுத்தாளர் சிவகாமி
எழுத்தாளர் அழகிய பெரியவன்
ஓசை காளிதாசன்

வரவேற்புரை – கவிஞர் அவைநாயகன்

நிகழ்ச்சித் தொகுப்பு – எழுத்தாளர் அஜயன் பாலா

நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
அனைவரும் வருக… வருக …

பிப்ரவரி14- 98, கோவை, காதலும் வெடிகுண்டும்…

எனது காதல் கவிதைத் தொகுப்பான ‘கவிதை அல்ல காதல் ‘ நூல் வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ல் 98ம் வருடம் கோவையில் நடந்தது.

அண்ணன் அறிவுமதியும், அண்ணன் பழநி பாரதியும் சிறப்பு விருந்தினர்கள்.மாலை 3 மணிக்கு விழா.

இடம் ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் திவ்வோதயா அரங்கம்.
‘விழா நேரத்திற்கு முன்பே கூட்டம் வரத் துவங்கி விட்டது. விரைவாகவே அரங்கம் நிறைந்து விட்டது.

அண்ணன் பழநிபாரதி சாய்பாபா காலனியின் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

கூட்டம் அதிகமாகி விட்டதால் அவர்களைக் காக்க வைப்பது முறையல்ல எனவே விழாவைத் துவங்கி
விடலாம் அண்ணன் வந்து இணைந்து கொள்வார் என்று முடிவெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்கள்
மேடையில் அமர வைக்கப் பட்டார்கள்.

நண்பன் மாகலிங்கத்தோடு பாடலோடு விழா துவங்கியது.

பாதிப் பாடல் பாடிக் கொண்டிருகும் போது மாபெரும் வெடிச் சத்தம், அரங்கமே கொஞ்ச நேரம்
அதிர்ந்து அடங்கியது. கூட்டம் முழுவதும் வெளியில் ஓடி வந்தது.

என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. விரும்பத் தகாத ஏதோ நடந்து விட்டது என்பதை மட்டும் அனைவருக்கும் புரிந்தது.

எனக்கு விழா அவ்வளவு தான் என்று தோன்றியது.

உதவி இயக்குனரான நான் என் சக்திக்கு மீறி உறவினர்கள், நண்பர்களிடம் பிய்த்துப் பிடிங்கி பணம்
தயார் செய்து செலவழித்திருந்தேன்.விழா நின்று போய்விட்டால் இன்னொரு முறை நடத்துவதென்பது சத்தியமாய் சாத்தியமில்லை.

குழுக்கள் குழுக்களாக கூடி நின்று அனைவரும் பேசி சலசலத்த படி இருந்தார்கள்.

அண்ணன் ஓசைக் காளிதாசனும்,அண்ணன் கவிஞர் அவை நாயகனும் குழப்பத்தில் நின்று
கொண்டிருந்தவனை உலுக்கி உலகிற்கு கொண்டு வந்தார்கள்.

‘போய் மேடைல உட்காருங்க ஆனது ஆகட்டும் நிகழ்சியை நடத்துவோம்’ என்றார்கள்.

மீண்டும் அண்ணன் அறிவுமதி மேடையில் வந்து அமர்ந்தார் விழாத் துவங்கியது.

கொஞ்ச நேரத்திற்கொரு முறை பெரும் வேட்டுச் சப்தங்கள் கேட்ட படி தான் இருந்தது.

பழநி பாரதி அண்ணன் வரவில்லை. எங்கு இருக்கிறார் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை.

கொஞ்சம் பேர் பீதியில் கிளம்பி விட்டாலும் அரங்கம் நிறைந்திருக்க விழா நடந்தது.

பாதியில் பழநி பாரதி வந்து விட்டார்.

அவர் வந்த பிறகு தான் வெளியே வெடித்துக் கொண்டிருப்பவைகள் குண்டுகள் என்பதை அறிந்தோம்.

மேடையிலேயே வெளியில் குண்டு வெடிப்பதைப் பற்றி அறிவித்தும் அனைவரும் விழாவில் பங்கு
கொண்டது ஆச்சரியமாய் தான் இருக்கிறது இன்றும்.

பழநி பாரதி பேசும் போது ‘ காதலைப் பற்றிப் பேசுவது மதத்திற்கு எதிராகப் பேசுவது, சாதிகளுக்கு
எதிராகப் பேசுவது, அதற்கு உதாரணமாகத் தான் வெளியே யாரோ யாரையோ அழிக்க ஆயுதங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொன் சுதா நாம் பேசுவதற்காக பூக்களை வழங்கி கொண்டிருக்கிறார்’ என்று பேசினார்.’

விழா சிறப்பாய் பயத்தோடும் பதட்டத்தோடும் நிறைவடைந்தது.

விழா முடிந்ததும் தான் தெரிய வந்தது எங்கேயும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை என்பது.

இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொருவராய் சென்று நண்பர்கள் விட்டு வந்தார்கள்.

பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த நண்பர் காந்தி, லதா அக்கா, நண்பன் மீன்ஸ், அம்சப்ரியா, மற்றும்

இன்னும் சிலர், சென்னயிலிருந்து, திருப்பூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அனைவரும் அரங்கிலேயே
தங்க வைக்கப் பட்டார்கள். விழா முடிந்தும் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்படியாக அந்த விழா அதில் பங்கு கொண்ட யாவருக்கும் மறக்க முடியாத திகிலான நாளாக அமைந்து விட்டது.

திகில் நிமிடங்கள்:

1. விழாவிற்கு முந்தைய நாள் இரவிலும், அதற்கு முந்திய நாள் இரவிலும் கோவை முழுக்க நானும்
நண்பன் மீனாட்சி சுந்தரமும், திலகேஸ்வரனும் போஸ்டர் ஓட்டினோம் அப்போது தானே அவர்கள்
குண்டுகள் வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

2. சிறப்பு விருந்தினர்களுக்கு ரோஜாக்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆர் எஸ் புரத்திற்கு
நானும் என் தம்பி பிரசாத்தும் அத்வானி பங்கு கொள்ளும் விழாவின் மேடயைக் கடந்து போய் அதன்
வழியாகவே திரும்பினோம். அதன் பிறகு அரை மணி நேரத்தில் முதல் குண்டு அங்கு வெடித்தது.

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்